சீன அதிபர் நாளை ர‌ஷ்யா பயணம்

சீன அதிபர் நாளை ர‌ஷ்யா பயணம்

1 mins read
6cead0e2-f7aa-41dc-b39d-daf7c689438b
-

பெய்ஜிங்: உக்ரேன் போரில் நம்பகமான நடுநிலையாளராக சீனாவால் இருக்க முடியாது என்று மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 20ஆம் தேதி ரஷ்யா புறப்பட உள்ளதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் செய்தியாளர்களிடம் சொன்னார். இந்தப் பயணத்தின்போது உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர புட்டினுக்கு ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த ஹூவா சுன்யிங், "பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது," எனக் குறிப்பிட்டார்.