மீண்டும் அம்னோ தலைவராக ஸாஹிட்

1 mins read
18e9c7e1-6610-4407-a7ed-d5c34526e1e7
லேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியின் பிரதான கட்சியான அம்னோவின் தலைவராக மீண்டும் திரு ஸாஹிட் ஹமிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படம்: இணையம் -

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியின் பிரதான கட்சியான அம்னோவின் தலைவராக மீண்டும் திரு ஸாஹிட் ஹமிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அம்னோ உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் வெற்றிகண்டார். பாஹாங் முதலமைச்சர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், மலேசியாவின் உயர்கல்வி அமைச்சர் காலெட் நூர்டின், முன்னாள் இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி கனி ஆகியோர் அம்னோ உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.