சியாங் மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் நகரம் கனத்த மழையாலும் ஆலங்கட்டி மழையாலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நகரின் பல கட்டடங்கள், மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
சுமார் 55 வீடுகளுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

