ரஷ்யாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்; புட்டினுடன் சந்திப்பு, கலந்துரையாடல்

ரஷ்யாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்; புட்டினுடன் சந்திப்பு, கலந்துரையாடல்

1 mins read
b6649636-940a-4034-8d5c-cf1bd7afa19f
-

மாஸ்கோ: சீன அதி­பர் ஸி ஜின்­பிங் ரஷ்­யா­வுக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

தலை­ந­கர் மாஸ்­கோ­வில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மி­ர் புட்­டினை அவர் நேற்று சந்­தித்­துப் பேசி­னார்.

உக்­ரேன் மீது போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வுக்கு எதி­ராக மேற்­கத்­திய நாடு­கள் ஒன்று திரண்­டுள்­ளன.

எனவே, சீனா­வின் ஆத­ரவை ரஷ்யா எதிர்­பார்க்­கிறது.

இந்­நி­லை­யில், இரு­த­ரப்­புக்கு இடையே நடு­நி­லை­யு­டன் இருந்து அமை­தியை நிலை­நாட்ட சீனா விருப்­பம் தெரி­வித்­துள்­ளது. இதை அதி­பர் புட்­டி­னி­டம் அதி­பர் ஸி வலி­யு­றுத்­து­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உக்­ரே­னிய சிறு­வர்­களை ரஷ்­யா­வுக்கு நாடு கடத்­தி­யது தொடர்­பாக புட்­டி­னுக்கு எதி­ராக அனைத்­து­லக குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் கைது ஆணை பிறப்­பித்­துள்­ளது.

இது ரஷ்­யா­வுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பார­பட்­ச­மிக்க நட­வ­டிக்கை என்று அதி­பர் புட்­டின் சாடி­யுள்­ளார்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல் நியாயமற்றது என்று சீனா அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.