தைப்பே: ஜெர்மனியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் 26 ஆண்டுகளில் முதன்முறையாக தைவானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தைவான் செல்லவிருக்கும் ஜெர்மனியின் கல்வி அமைச்சர் பெட்டினா ஸ்டார்க்-வாட்ஸிங்கர், தமது பயணத்துக்கும் சீனா விவகாரத்தில் தமது அரசாங்கத்தின் அணுகுமுறைக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளைப் போல் ஜெர்மனிக்கும் தைவானுடன் அரசதந்திர உறவு கிடையாது.
இதற்கிடையே, தைவானிய அதிபர் சாய் இங்-வென் மத்திய அமெரிக்க வட்டாரத்துக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும்போது அமெரிக்காவுக்கும் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க வட்டாரத்துக்குச் செல்லும்போதும் தைவானுக்குத் திரும்பி வரும்போதும் திருவாட்டி சாய் அமெரிக்காவுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
எனினும், அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியை அவர் சந்திப்பாரா என்பது குறித்த தகவல்களை தைப்பே வெளியிடவில்லை.

