$118 பி. மதிப்புள்ள எரிசக்தி இறக்குமதி

$118 பி. மதிப்புள்ள எரிசக்தி இறக்குமதி

1 mins read
be931554-76b2-42c9-807a-bc4b7e626033
-

பெய்­ஜிங்: உக்­ரேன்­மீது ரஷ்யா படை­யெ­டுத்த பிறகு இந்த ஓராண்டு காலத்­தில் சீனா, ரஷ்­யா­வி­ட­மி­ருந்து வாங்­கும் எண்­ணெய், கரி­மம், எரி­வாயு போன்ற எரி­பொ­ருள்­க­ளின் அளவு கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு முன்பு வாங்­கி­ய­தில் கிட்­டத்­தட்ட ஒன்­றரை மடங்கு எரி­பொ­ருள்­களை சீனா, ரஷ்­யா­வி­ட­மி­ருந்து வாங்­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து சென்ற மாதம் வரை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து சீனா வாங்­கிய எரி­பொ­ருள்­க­ளின் மதிப்பு 88 பில்­லி­யன் டால­ருக்கு (118 பில்லியன் வெள்ளி) அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சீனா­வின் குடி­நு­ழை­வுத் துறை­யின் புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

உக்­ரேன் போர் தொடங்­கி­ய­திலி­ருந்து பல்­வேறு உலக நாடு­கள் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எரி­பொ­ருள் உட்­பட பல­வகை பொருள்­களை இறக்­கு­மதி செய்­வ­தைத் தவிர்த்து வரு­கின்­றன. அத்தகைய நாடு­கள் விட்டுவைத்திருக்கும் வெற்றிடத்தை இப்­போது சீனா நிரப்பியுள்ளது.

உக்­ரேன் போர் தொடங்­கு­வதற்கு முன்பு ரஷ்­யா­வி­ட­மி­ருந்து சீனா வாங்­கிய எரி­பொ­ருள்­களின் மதிப்பு கிட்­டத்­தட்ட 57 பில்­லி­யன் டாலர் மட்­டுமே.

உக்­ரேன்­மீது படை­யெ­டுத்­த­தற்­காக உலக நாடு­கள் ரஷ்­யா­மீது பல தடை உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­துள்­ளன. அப்­ப­டி­யி­ருந்­தும் போரைத் தொடர ரஷ்­யா­வுக்­குப் போது­மான நிதி இருந்து வந்­துள்­ளது. மேலும், சலுகை விலை­யில் சீனா, ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எரி­பொருள்­களை வாங்கி வரு­கிறது.

ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கும் எரிபொருள்களின் அளவு கணிசமாக அதிகரித்தது