சிங்கப்பூருக்குச் செல்ல ரோஸ்மா மன்சூருக்கு அனுமதி

சிங்கப்பூருக்குச் செல்ல ரோஸ்மா மன்சூருக்கு அனுமதி

1 mins read
82979027-eadc-4b61-8572-b61fe7f2f6ef
-

கோலா­லம்­பூர்: சிறை­யில் இருக்­கும் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்­கின் மனைவி ரோஸ்மா மன்­சூர் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே வழி­திரு­வாட்டி ரோஸ்­மா­வின் கட­வுச்­சீட்டை தற்­கா­லி­க­மாக திரும்­பத் தரு­மாறு மலே­சி­யா­வின் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

திரு­வாட்டி ரோஸ்­மா­வின் மகளும் பேர­னும் சிங்­கப்­பூ­ரில் இருக்­கின்­ற­னர். நோன்­புப் பெரு­நா­ளை­யொட்டி இரு­வ­ரை­யும் சந்­திக்க அவர் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார். அவ­ரின் பேர­னுக்கு உடல்­நலம் சரி­யில்லை.

நாளை முதல் வரும் மே மாதம் ஐந்­தாம் தேதி வரை சிங்­கப்­பூ­ரில் இருக்க திரு­வாட்டி ரோஸ்­மா­வுக்கு அனு­மதி வழங்­கப்­பட்டுள்ளது.