ஜோகூர் விபத்தை நேரில் கண்டோரை நாடும் காவல்துறை

ஜோகூர் விபத்தை நேரில் கண்டோரை நாடும் காவல்துறை

1 mins read
4fd6db80-829d-40b2-b9a9-8d5c8a3bed04
-

ஜோகூர்: சென்ற வாரம் வேலைக்காக சிங்­கப்­பூ­ருக்­குச் சென்­று­கொண்­டி­ருந்த மலே­சி­யத் தம்­ப­தி­யர் சாலை விபத்தில் மாண்­ட­னர். கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்த அதை நேரில் கண்­ட­வர்­களை மலே­சிய காவல்­து­றை­யி­னர் தேடு­கின்­ற­னர்.

மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற 36 வயது லோ கிம் சியோங்­கும் கர்ப்­ப­மாக இருந்த அவ­ரின் மனைவி 30 வயது டான் லே ரூவும் விபத்­தில் உயி­ரி­ழந்­த­னர்.

விபத்­தைக் கண்டோர் +60185779391 என்ற தொலை­பேசி எண்­ணுக்கு அழைத்­து தக­வல் தெரி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.