போலா (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல் ஒன்று மூன்று வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கிய வேளையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.
'பிரின்செஸ் எம்பிரஸ்' எனும் அந்தக் கப்பல் 800,000 லிட்டர் அளவிலான கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. சென்ற மாதம் 28ஆம் தேதியன்று மிண்டோரோ தீவுக்கு அருகே அது மூழ்கியது.

