மே மாதம் 14ஆம் தேதியன்று தாய்லாந்து பொதுத் தேர்தல்

மே மாதம் 14ஆம் தேதியன்று தாய்லாந்து பொதுத் தேர்தல்

1 mins read
76d38e3d-1859-4ced-bb5a-1ee4f3ee91c8
-

பேங்­காக்: இவ்­வாண்டு மே மாதம் 14ஆம் தேதி­யன்று தாய்­லாந்­தின் பொதுத் தேர்­தல் நடை­பெ­றும். அந்­நாட்­டின் தேர்­தல் ஆணை­யத் தலை­வர் இட்­டிப்­பொர்ன் பூன்­பிராக்­கோங் நேற்று இதை அறி­வித்­தார்.

பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­விருப்­பதை முன்­னிட்டு தாய்­லாந்து நாடா­ளு­மன்­றம் நேற்று முன்­தினம் கலைக்­கப்­பட்­டது.

இவ்வாண்டின் பொதுத் தேர்­தலில் தற்­போ­தைய பிர­த­மர் பிர­யுத் சான் ஓசாவின் கூட்­ட­ணிக்­கும் தாய்­லாந்­தின் ஆகப் பெரிய எதிர்­க்கட்­சி­யான ஷினாவாட்ரா குடும்பத்தின் ஃபியூ தாய் கட்சிக்­கும் இடை­யே­ க­டும் போட்டி இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.