காபூல்: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்
கிழமை இரவு ரிக்டர் அளவில் 6.5ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 11 பேர் மரண
மடைந்ததுடன் இதனால் இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"இது ஒரு பயங்கரமான நிலநடுக்கம். இதுபோன்ற நில அதிர்வை நான் எனது வாழ்
நாளில் சந்தித்ததில்லை," என்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் கட்டேரா என்ற 50 வயது ஆடவர் தெரிவித்தார். நிலநடுக்கத்தால் தான் தங்கி
யிருந்த ஐந்து மாடிக் கட்டடத்திலிருந்து அவசரமாக வெளியேறியதாக அவர் விளக்கினார்.
இந்த நிலநடுக்கம் 1,800 கிலோமீட்டர் பரப்பளவில் 285 மில்லியன் மக்கள் வாழும் பாகிஸ்தான், இந்தியா, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஸகஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைப்பகுதியில் வடமேற்கு ஆப்கானிஸ்தானில், குறைந்த அளவிலான மக்கள் வசிக்கும் ஜுரும் என்ற கிராமத்தில் மையம் கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

