மியன்மாருக்கு எதிராக மேலும் தடைகள்: அமெரிக்கா

மியன்மாருக்கு எதிராக மேலும் தடைகள்: அமெரிக்கா

1 mins read
ab551635-cb02-417c-b78a-4671372dbe73
-

ஜகார்த்தா: எதிர்­வ­ரும் நாள்­களில் மியன்­மா­ரில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக மேலும் தடை­கள் விதிக்­கப்­படும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

இது­பற்றி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமெ­ரிக்க உள்­துறை அமைச்சு ஆலோ­ச­கர் டெரக் சோலெட், இந்­தத் தடை­கள் மியன்­மார் ராணுவ ஆட்சி மன்­றம் ஆயு­தங்­கள் வாங்­கத் தேவைப்­படும் பணத்தை ஈட்ட மேலும் சிர­ம­மாக்­கும் என்று கூறி­னார்.

"மியன்­மார் ராணுவ ஆட்சி மன்­றம் மீதான நெருக்­கு­தலை அதி­க­ரித்து அது போருக்­குத் தேவை­யான பணம் ஈட்­டு­வதை மேலும் சிர­மப்­ப­டுத்­து­வோம்," என்று கூறிய திரு சோலெட், தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் மியன்­மார் செய­லி­ழந்து நிற்­கும் நாடு என்ற நிலையை நோக்­கிச் செல்­கிறது என்­றார்.

மியன்­மார் ராணு­வம் அந்­நாட்­டில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரசை கடந்த 2021ஆம் ஆண்டு கவிழ்த்­தது.

அது­மு­தல் அந்­நாட்டு ராணு­வம் ஆட்­சி­யின் எதிர்ப்­பா­ளர்­கள்­மீது கடு­மை­யான அடக்­கு­

மு­றையை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது.

இத­னால் அந்­நாடு பெரும் குழப்­ப­நி­லைக்குத் தள்­ளப்­

பட்­டுள்­ளது.

இதைத் தொடர்ந்து அமெ­ரிக்கா மற்­றும் பல மேற்­கத்­திய நாடு­கள் ராணுவ ஆட்சி மன்ற உறுப்­பி­னர்­கள், ராணுவ ஆட்சி அமைப்­பு­கள், ராணு­வக் கட்டுப் பாட்டில் இயங்­கும் நிறு­வ­னங்­கள் போன்­றவை மீது தொடர் தடை­களை விதித்த வண்­ணம்

உள்­ளன.