டிக்டாக் வேண்டாம்: ஊழியர்களுக்கு பிபிசி அறிவுறுத்து

டிக்டாக் வேண்டாம்: ஊழியர்களுக்கு பிபிசி அறிவுறுத்து

1 mins read
8f1ee51d-6c4f-462c-b03b-96a75d8e7529
-

சீனக் காணொளி செயலியான டிக்டாக்கை, வர்த்தகக் காரணங்களுக்கு தேவை எனில் மட்டுமே அதை வைத்துக்கொள்ளும்படியும் மற்றபடி அதைத் தங்களது சாதனங்களில் இருந்து நீக்கிவிடும்படியும் பிபிசி ஊடக நிறுவனம் தனது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

"பிபிசி நிறுவன சாதனங் களில், ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தகக் காரணங்கள் இல்லாவிடில், ஊழியர்கள் தங்கள் சாதனங்களில் டிக்டாக் செயலி பதிவிறக்கம் செய்வதற்கு நாங்கள் அங்கீகாரம் வழங்க மாட்டோம்," என்று பிபிசி தனது ஊழியர்களுக்கு திங்கள் அன்று தகவல் அனுப்பியது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உரிமை கொண் டாடும் டிக்டாக் செயலி சேகரிக்கும் தகவல்கள் சீன அரசுக்குச் செல்லக்கூடும் என்பதால் பல நாடுகள் அதற்குத் தடை விதித்து வருகின்றன.