கோலாலம்பூர்: இதற்கு முன்பு மலேசியப் பிரதமராக இருந்தோருடன் ஒப்பிடுகையில் தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராகிமுடன்தான் தம்மால் ஆக சுமுகமாகப் பணியாற்ற முடிவதாக ஜோகூர் மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் கூறியுள்ளார். 'தி ஸ்டார்' நாளிதழுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
சந்திப்புகள், தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றின் வாயிலாக திரு அன்வாருடன் பல கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடிவதாகவும் அது இருவருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கக் கைகொடுத்திருப்பதாகவும் மாமன்னர் குறிப்பிட்டார்.
நாட்டின் 'புற்றுநோயாக' உருவெடுத்துள்ள ஊழல் பிரச்சினையை ஒழிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டினார்.

