11 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்படலாம்

11 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்படலாம்

1 mins read
19ff1337-b0a5-4bdf-84e3-7d6e41fee130
-

மணிலா: பிலிப்­பீன்­சில் தண்­ணீர்ப் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­வுள்­ள­தாக அந்­நாட்டு அதி­பர் ஃபெர்டி­னாண்ட் மார்க்­கோஸ் ஜூனி­யர் எச்­ச­ரித்­துள்­ளார். சுமார் 11 மில்­லி­யன் குடும்­பங்­கள் பாதிக்­கப்­படக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வறட்­சிக் காலம் நெருங்­கும் வேளை­யில் பல­ருக்கு சுத்­த­மான நீர் கிடைக்­கா­மல் போக­லாம் என்று திரு மார்க்­கோஸ் கூறி­னார். இப்­பி­ரச்­சி­னை­யைக் கையாள நவீன நீர் சுத்­தி­க­ரிப்பு தொழில்­நுட்ப முறை­களை பிலிப்­பீன்ஸ் உப­யோ­கிக்­க­வேண்­டும் என்று அவர் சொன்­னார்.

பிலிப்­பீன்ஸ் தலை­ந­கர் மணி­லா­வில் நடை­பெற்ற மாநாடு ஒன்­றில் திரு மார்க்­கோஸ் பேசி­னார். பிலிப்­பீன்ஸ் தொடர்ந்து நிலத்­த­டி­யில் உள்ள நீரை அதி­கம் சார்ந்­தி­ருக்­கிறது. இந்­நி­லை­யில் நிலத்­துக்கு மேல் உள்ள நீரை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள தனது நீர் சுத்­தி­க­ரிப்பு முறை­களை அந்­நாடு மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும் என்­ப­தைத் திரு மார்க்­கோஸ் சுட்­டி­னார். அவ்­வாறே அனை­வ­ருக்­கும் சுத்­த­மான குடி­நீர் கிடைக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

பிலிப்­பீன்­சில் இன்­ன­மும் அசுத்­த­மான கிண­று­கள், ஆறு­கள், கால்­வாய்­கள் போன்­ற­வற்­றி­லி­ருந்து வரும் நீரை சுமார் 11 மில்­லி­யன் குடும்­பங்­கள் பயன்­படுத்­து­வ­தாக அந்­நாட்­டின் தேசிய நீர் வளப் பிரிவு அண்­மை­யில் தெரி­வித்­தது. அந்த எண்­ணிக்கை, பிலிப்­பீன்­சில் உள்ள மொத்த குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தட்ட பாதியாகும்.

பிலிப்பீன்சில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று முன்னுரைப்பு