'புட்டினைக் கைதுசெய்யும் முயற்சி அது ரஷ்யாமீதான போராகும்'

'புட்டினைக் கைதுசெய்யும் முயற்சி அது ரஷ்யாமீதான போராகும்'

1 mins read
041eb130-5001-4020-8df5-799c432e91a7
-

மாஸ்கோ: ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னைக் கைது­செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டால் அது ரஷ்­யா­மீது போர் தொடுப்­பதா­கும் என்று முன்­னாள் ரஷ்ய அதி­பர் டிமிட்ரி மெட்­வடேவ் கூறி­யுள்­ளார். அவர், திரு புட்­டி­னின் ஆத­ர­வா­ள­ர் ஆவார்.

திரு புட்­டி­னைக் கைது­செய்வதற்கு அனைத்­து­லகக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் சென்ற வாரம் ஆணை பிறப்­பித்­த­தைத் தொடர்ந்து திரு மெட்­வடேவ் இவ்­வாறு சொன்­னார்.

இதற்­கி­டையே, பாக்­முட் நக­ரில் ரஷ்­யப் படை­கள் நடத்தி வந்த தாக்­கு­தல்­களின் வேகம் குறைந்­துள்­ள­தாக உக்­ரேன் கூறி­யுள்­ளது. பதில் தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளத் தாங்­கள் தயா­ராய் இருப்­ப­தா­க­வும் உக்­ரேன் குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, உக்­ரே­னின் ரிஷிஸ்­சிவ், ஸப்­போ­ரிஷ்­சியா நக­ரங்­க­ளின்­மீது ரஷ்யா நடத்­திய தாக்­கு­தல்­களில் குறைந்­தது ஒன்­பது பேர் மாண்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது.