சீன நிறுவனங்கள்மீது குற்றம் சுமத்துவதை நிறுத்த வலியுறுத்து

சீன நிறுவனங்கள்மீது குற்றம் சுமத்துவதை நிறுத்த வலியுறுத்து

1 mins read
2b993e9a-ba9e-47af-b55b-5af7d3c03220
-

பெய்­ஜிங்: அமெ­ரிக்­கா­வின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­தல் எனக் கூறி, சீன நிறு­வ­னங்­கள்­மீது அடிப்­படை ஆதா­ர­மின்­றிக் குற்­றஞ்­சாட்­டு­வதை நிறுத்­திக்­கொள்­ளும்­படி அமெ­ரிக்­காவை சீனா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

'டிக்­டாக்' செய­லியை உரு­வாக்­கிய சீனத் தொழில்­நுட்­பப் பெரு­நி­று­வ­ன­மான 'பைட் டான்ஸ்', அமெ­ரிக்­கா­வின் பாது­காப்­பிற்கு மிரட்­ட­லாக இருப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­து­வது 'நியா­ய­மற்ற அடக்­கு­முறை' என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் மாவ் நிங் தெரி­வித்­தார்.