வாஷிங்டன்: சிரியாவில் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அத்தாக்குதலில் அமெரிக்கப் படையினர் ஐவர் உட்பட மேலும் அறுவர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அத்தாக்குதல் அரங்கேறியது.
வடகிழக்கு சிரியாவில் அல் ஹசக்கா அருகேயுள்ள கூட்டு ராணுவப் படைத்தளத்தைக் குறிவைத்து, அத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள் இதற்குக் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி அக்குழுக்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழியாக பதில் தாக்குதல் நடத்தியது.
அத்தாக்குதலில் ஈரான் ஆதரவுப் படையினர் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

