பிரான்சில் நகர மண்டபத்திற்குத் தீவைப்பு

பிரான்சில் நகர மண்டபத்திற்குத் தீவைப்பு

25 Mar 2023 - 5:30 am

1 mins read

ஓய்வூதியம் பெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்த பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அந்நாட்டில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது. வியாழக்கிழமை மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கிப் போராடியதாக பிபிசி செய்தி கூறுகிறது. போராட்டக்காரர்கள் போர்டோ நகரிலுள்ள நகர மண்டபத்திற்குத் தீ வைத்தனர். தலைநகர் பாரிசில் 119,000 பேர் போராட, அவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. போராட்டங்களை அடுத்து நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டனர். வரும் செவ்வாய்க்கிழமை மேலும் போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே, பிரிட்டிஷ் அரசர் 3ஆம் சார்ல்ஸ் நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அப்பயணம் தள்ளி வைக்கப்படுவதாக பிரெஞ்சு அதிபர் மாளிகை தெரிவித்து இருக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ்