மறுசீரமைக்கப்படும் கோலாலம்பூர் விமான நிலையம்

மறுசீரமைக்கப்படும் கோலாலம்பூர் விமான நிலையம்

2 mins read
ef2c630a-fede-4680-b6f0-b37111c278f2
-

மீண்டும் உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களுக்குள் ஒன்றாக இடம்பெறும் என நம்பிக்கை

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முதன்­மை­யான கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யம் பேர­ள­வில் மறு­சீ­ர­மைக்­கப்­பட இருக்­கிறது.

வரும் 2028ஆம் ஆண்டிற்குள் மீண்­டும் அவ்­வி­மான நிலை­யத்தை உல­கின் சிறந்த பத்து விமான நிலை­யங்­க­ளுக்­குள் ஒன்­றாக இடம்­பெ­றச் செய்­யும் நம்­பிக்­கை­யு­டன் இந்த நட­வடிக்கை இடம்­பெ­றவுள்ளது.

குடி­நு­ழைவு முகப்­பு­களில் நீண்ட வரிசை, விமான நிலை­யத்­தி­னுள் செயல்­படும் 'ஏரோட்­ரெ­யின்' இணைப்பு ரயில்­கள் அடிக்­கடி நின்று­போ­வது உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­கள் 25 ஆண்­டு­க­ளா­கச் செயல்­பட்டு ­வ­ரும் அவ்­வி­மான நிலை­யத்­திற்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இவ்­வாண்­டிற்­கான 'ஸ்கை­டி­ராக்ஸ்' சிறந்த விமான நிலை­யங்­கள் பட்­டி­யலில் கோலா­லம்­பூர் விமான நிலை­யம் மேலும் ஐந்து இடங்­கள் சரிந்து, 67வது இடத்­தைப் பிடித்­தது.

இந்­நி­லை­யில், பய­ணி­கள் தாங்­களாக பய­ணப்­பை­க­ளைப் போடும் வசதி, 'செக்-இன்' முகப்­பு­கள் மறு­வடி­வ­மைப்பு, புதிய ஏரோட்­ரெ­யின், பய­ணப்பை கையா­ளும் வசதி, புதிய ஓய்­வ­றை­கள், உணவு, பான நிலை­யங்­கள் உள்­ளிட்ட மாற்­றங்­கள் இடம்­பெ­றும் என்று மலே­சிய விமான நிலை­யக் கழ­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் இஸ்­கந்­தர் மிஸல் மஹ்­மூத் தெரி­வித்­தார்.

"கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு மீண்­டும் பொலி­வூட்ட விரும்­பு­கி­றோம்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் அவர் சொன்­னார்.

கடந்த 1998ஆம் ஆண்டு திறக்­கப்­பட்ட அவ்­வி­மான நிலை­யம், 2001, 2010, 2011, 2012 என நான்கு முறை உல­கின் சிறந்த பத்து விமான நிலை­யங்­க­ளுக்­குள் ஒன்­றாக வந்­தது. அதன்­பி­றகு அது தொடர்ந்து சரி­வைச் சந்­தித்து வரு­கிறது.

கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யம் பட்­டி­ய­லில் 67ஆம் இடத்­திற்கு இறங்­கி­யது ஏமாற்­ற­ம் அளிப்­ப­தாக மலே­சி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆன்­டனி லோக் கூறி­னார். அண்­மைய ஆண்­டு­க­ளாக அங்கு பரா­ம­ரிப்பு மோச­மாக உள்­ளது என்ற அவர், அதற்கு கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லும் முடக்­க­நிலை அறி­விப்­பு­களும் ஒரு கார­ணம் என்­றும் குறிப்­பிட்­டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அவ்­வி­மான நிலை­யம் 35 மில்­லி­யன் பயணி­களைக் கையாண்ட நிலை­யில், சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 25 மில்­லி­ய­னாக இருந்­தது.

இவ்­வட்­டா­ரத்­தி­லேயே பய­ணப்­பை­க­ளைக் கையா­ளும் வசதி கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில்­தான் ஆக மோசம் என்­றார் மலே­சிய சுற்­றுலா, பயண முக­வர்­கள் சங்­கத்­தின் கௌரவ பொதுச் செய­லா­ளர் ஃபயீஸ் ஃபதில்லா.

சிங்­கப்­பூ­ரில் குடி­நு­ழைவு நடை­முறைக்­குப்­பின் சில நிமி­டங்­களில் பய­ணி­கள் தங்­க­ளது பய­ணப்­பை­களைப் பெறமுடி­யும் என்ற நிலை­யில், கோலா­லம்­பூர் விமான நிலை­யத்­தில் 30 நிமி­டங்­கள்­வரை காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.