ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அங்குள்ள பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பலரின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஜோகூரில் உள்ள கூலாய் நகரில் கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மழை பெய்ததால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
ஜோகூரில் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.