பாரிஸ்: பிரான்சில் ஓய்வுகால ஊதியத் திட்டத்துக்குத் தகுதிபெறும் வயதை உயர்த்துவதற்கான திட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இதையடுத்து அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த பிரிட்டனின் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் தமது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
நேற்று முன்தினம் பின்னிரவிலும் தொடர்ந்த வன்முறைக்கு எதிராக பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் கண்டனம் தெரிவித்தார். ஓய்வுகால ஊதியத் திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கான வயதை உயர்த்தப்போவதாக மெக்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து பிரான்சில் பலர் அவர்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அளவுக்கதிகமாக வன்முறையில் ஈடுபடுவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறியிருக்கிறது.