மிசிசிப்பியில் 'ெடார்னேடோ': பலர் மரணம், பெரும் சேதம்

மிசிசிப்பியில் 'ெடார்னேடோ': பலர் மரணம், பெரும் சேதம்

1 mins read
d4681f86-e1a1-4db5-b3b5-b07d1177ae4e
-

ஜாக்­சன் (அமெ­ரிக்கா): அமெ­ரிக்­கா­வின் மிசி­சிப்பி மாநி­லத்­தில் 'டொர்­னேடோ' சூறா­வ­ளி­யா­லும் இடி­யு­டன் கூடிய கன­ம­ழை­யா­லும் குறைந்­தது 14 பேர் மாண்­ட­னர். குறைந்­தது 23 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் சில தக­வல்­கள் தெரி­வித்­தன.

பல கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன. சிலர் இடி­பா­டு­களில் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது. சுமார் 160 கிலோ­மீட்­டர் தூரத்­துக்கு சூறா­வ­ளி­யா­லும் கன­ம­ழை­யா­லும் சேதம் ஏற்­பட்­டி­ருந்­த­தாக முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஷார்க்கி, ஹம்­ஃபி­ரீஸ் ஆகிய பகு­தி­களில் மீட்­புப் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­தாக மிசி­சிப்பி அவ­சர சேவை நிர்­வாக அமைப்­பின் தொடர்பு தக­வல் பிரிவு கூறி­யது. மிசி­சிப்­பி­யின் பல இடங்­களில் மின்­த­டை­யும் ஏற்­பட்­டது.

சூறா­வ­ளி­யால் சில்­வர் கெளன்டி, ரோலிங் ஃபோக் ஆகிய நக­ரங்­களில் சேதம் ஏற்­பட்­ட­தாக ஜாக்­சன் நக­ரில் இருக்­கும் தேசிய பரு­வ­நிலை சேவை அலு­வ­ல­கம் டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது. உள்­ளூர் நேரப்­படி நேற்று காலை நில­வ­ரப்­படி அல­பாமா, மிசி­சிப்பி, டெனசி ஆகிய மாநி­லங்­களில் 80,000க்கும் அதி­க­மா­னோர் மின்­த­டை­யால் பாதிக்­கப்­பட்­ட­னர்.