சாக்லெட் ஆலையில் வெடிப்பு, இருவர் மரணம்

சாக்லெட் ஆலையில் வெடிப்பு, இருவர் மரணம்

1 mins read
84380642-9e87-4280-924c-b6d58e8566f4
-

ரெடிங் (அமெ­ரிக்கா): அமெ­ரிக்­கா­வில் உள்ள சாக்­லெட் ஆலை ஒன்­றில் நிகழ்ந்த வெடிப்­பில் குறைந்­தது இரு­வர் மாண்­ட­னர், ஒன்­பது பேரைக் காணவில்லை. இச்­சம்­ப­வம் பென்­சில்­வே­னியா மாநி­லத்­தில் உள்ள வெஸ்ட் ரெடிங் பகு­தி­யில் நிகழ்ந்­தது.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று அதி­காலை ஐந்து மணிக்கு ஆர்­எம் பால்­மர் சாக்­லெட் ஆலை­யில் வெடிப்பு நேர்ந்­தது. அதில் ஆலை­யின் ஒரு கட்­ட­டம் அழிந்­து­போனது, மற்­றொன்று சேத­மடைந்தது.

அரு­கில் இருக்­கும் சில வீடு­கள் வெடிப்­பால் அைசந்­தி­ருக்­கின்­றன.

வெடிப்­புக்­குப் பின்­னால் இருக்­கும் கார­ணத்தை அறிய விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.