பெலரூசில் அணுவாயுதங்களை நிறுத்த புட்டின் திட்டம்

பெலரூசில் அணுவாயுதங்களை நிறுத்த புட்டின் திட்டம்

1 mins read
3942b255-15d6-4bf9-be52-e2e6f1890200
-

மாஸ்கோ: பெலரூசில் அணு­வாயு­தங்­களை நிறுத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் தெரி­வித்­துள்­ளார். இவ்­வாண்டு ஜூலை மாதத் தொடக்­கத்­துக்­குள் பெல­ரூ­சில் அணு­வாயு­தங்­க­ளைப் பாது­காப்­பாக வைப்­ப­தற்­கான இடம் அமைக்­கப்­படும் என்று ரஷ்யாவின் 'ரஷ்யா 1' ஊட­கத்­தி­டம் திரு புட்­டின் கூறி­னார்.

1990களின் தொடக்­கத்­திலிருந்து இது­வரை பெலரூசில் அணு­வா­யு­தங்­கள் நிறுத்­தப்­ப­ட­வில்லை. சோவி­யத் ஒன்­றி­யம் கலைந்த பிறகு தன்­னி­டம் இருந்த பேரழிவை ஏற்­ப­டுத்தக்­­கூடிய ஆயு­தங்­களை ரஷ்­யா­வி­டம் ஒப்­படைக்க பெலரூஸ் ஒப்­புக்­கொண்டது.