சூறாவளியால் நகரம் தரைமட்டம்

சூறாவளியால் நகரம் தரைமட்டம்

1 mins read
01db229c-3e08-4f23-9d8b-5b04380a4d3a
-

ரோலிங் ஃபோர்க்: அமெ­ரிக்­கா­வின் மிசி­சிப்பி, அல­பாமா ஆகிய மாநி­லங்­க­ளைத் தாக்­கிய சூறா­வ­ளி­யால் குறைந்­தது 26 பேர் மாண்­டு­விட்­ட­னர். பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் மீட்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

மிசி­சிப்­பி­யில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அம்­மாநிலத்­தில் உள்ள ரோலிங் ஃபோர்க் நக­ரம் கிட்­டத்­தட்ட முழுமை­யாக அழிந்­து­போய்­விட்டது.

இந்­ந­க­ரில் வாக­னங்­கள் நசுக்­கப்­பட்­டன; சிதை­வு­க­ளால் சாலை­கள் களே­ப­ர­மா­கக் காட்­சி­ய­ளிக்­கின்­றன. ரோலிங் ஃபோர்க்­கிற்கு அருகே உள்ள ஷார்க்கி பகு­தி­யில் இயல்­பு­நிலை காணப்­பட்­டது. எனி­னும், சூறாவளியால் பல வீடுகள் தகர்ந்துபோயின.

மிசி­சிப்­பி­யில் நிகழ்ந்­துள்­ளதை ஒரு பெரும் துய­ரச் சம்­பவமாக அம்­மா­நி­லத்­தின் ஆளு­நர் டேட் ரீவ்ஸ் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளார். சம்­ப­வம் குறித்த தக­வல்­களை அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்டு வந்­துள்­ளார்.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டத் தயா­ராய் இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சூறா­வளி ஐந்­தி­லி­ருந்து 10 நிமி­டங்­க­ளுக்கு மட்­டுமே நீடித்­தததாக குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் கூறி­னர். அந்த நேரத்­தில் தங்­க­ளின் வீடு­கள் பலத்த காற்­றால் தகர்க்கப்பட்டதாக அவர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

அமெரிக்காவில் சூறாவளி; மிசிசிப்பி, அலபாமாவில் பாதிப்பு