சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய மாநிலமான நியூ சவுத் வேல்சில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. மாநிலத் தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கும் லிபரல் தேசிய கட்சிகள் கூட்டணிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்காது எனக் கருதப்பட்டது.
எனினும், ஆகக் கடைசி நிலவரப்படி பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் விளிம்பில் தொழிலாளர் கட்சி உள்ளது.

