ஜகார்த்தா: இந்தோனீசியாவின் எண்ணெய்க் கப்பல் ஒன்றில் தீ மூண்டதால் குறைந்தது இரண்டு கப்பல் ஊழியர்கள் மாண்டுவிட்டனர். ஒருவரைக் காணவில்லை.
மேற்கு நுசா தெங்காரா மாநிலத்தின் மட்டாராம் கடற்கரைக்கு அருகே இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 2.50 மணிக்கு நிகழ்ந்தது. மாண்டவர்கள், காணாமற்போனவர் உட்பட 17 ஊழியர்கள் இருந்த எம்டி கிரிஸ்டின் எனும் இக்கப்பலில் 5,900 கிலோலிட்டர் அளவு எண்ணெய் இருந்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை கடலில் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்று இந்தோனீசிய அரசாங்கத்தின் பெர்த்தாமினா எரிசக்தி நிறுவனம் தெரிவித்தது.

