புகார் செய்வோரின் மனதைக் குளிரவைக்கும் 'மசாஜ்'

புகார் செய்வோரின் மனதைக் குளிரவைக்கும் 'மசாஜ்'

1 mins read
6b4b0be9-5aff-4a4e-8557-54b5758fa477
-

பேங்காக்: காவல்­நி­லை­யத்­தில் புகார் அளிக்க வரு­வோ­ரின் மன­வுளைச்­ச­லைத் தணிக்­கும் வித­மாக அங்­கேயே அவர்­க­ளின் உடம்பு பிடித்து விடப்­ப­டு­கிறது. இப்­படி ஒரு வியப்­பான சேவையை தாய்­லாந்­தின் மூவாங் மாவட்­டத்­தில் உள்ள நோங் ட்ருட் காவல்­நி­லை­யம் வழங்­கு­வ­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரிவித்துள்ளன.

இந்­தக் காவல் நிலை­யத்­தில் அதி­கா­ரி­யாக உள்ள 58 வயது லெப்­டி­னென்ட் பக்­ரேன்­கி­ரிட் தோங்­சுக் 'தாய்-மசாஜ்' சேவை­யில் பயிற்­சி­யும் நிபு­ணத்­து­வ­மும் பெற்­ற­வர். புகார் அளிக்கத் தமது காவல்­ நி­லை­யத்­துக்கு நேர­டி­யாக வரு­வோ­ரில் பொரும்­பா­லோர் மிகுந்த மன­வுளைச்­ச­லு­டன் காணப்­ப­டு­வதைக் கவ­னித்து வந்த அவர், அதற்கு ஒரு தீர்வு காண யோசித்­தார். 'வேதனை தீர்க்­கும் உடம்­பு­பி­டித்­தல்' எனும் திட்­டத்தை தொடங்­கி­ய­தோடு, அங்கு வரும் பொது­மக்­க­ளுக்கு அவரே உடம்­பு­பிடி (மசாஜ்) சேவை செய்­து வரு­வ­தாக பேங்­காக் போஸ்ட் தெரி­வித்­தது.

தங்­க­ளுக்கு நேர்ந்த துன்­பத்தை முறை­யிட வரு­வோரின் மனதை அமை­திப்­படுத்து­வதே இத்­திட்­டத்­தின் நோக்­கம் என்­றும் அது கூறி­யது.