தோக்கியோ: பாதுகாப்பு அம்சங்கள் மீதான உயர்மட்ட அமைச்சர்நிலைப் பேச்சு நடத்துவதற்காக முறையான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆயத்தமாகி வருவதாக கியோடோ செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. இந்த மூன்று நாடுகளும் தங்களது முதல் கூட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடுவதாகவும் அது கூறியது. ஜப்பானுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையில் அமைந்திருக்கும் தைவான் மீது சீன ராணுவம் அதிகமாகக் கவனம் செலுத்தி வரும் நிலையில் இப்படியொரு சந்திப்பு நடைபெறுகிறது. தைவானை நோக்கிய சீனாவின் ராணுவ நடமாட்டம் போருக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று வாஷிங்டனும் தோக்கியோவும் கவலை தெரிவித்துள்ளன.
தைவான் பதற்றம்: 3 நாடுகள் சந்திப்பு
1 mins read
-

