39 பேர் தீயில் கருகி மாண்டனர்

39 பேர் தீயில் கருகி மாண்டனர்

1 mins read
ba32b6d9-a872-4bb7-bea3-afc97772eca3
-

கியு­டேட் ஜுவா­ரெஸ்: மெக்­சிகோ-அமெ­ரிக்க எல்லை நக­ரான கியு­டேட் ஜுவா­ரெ­ஸில் உள்ள வெளி­நாட்­டி­னர் தங்­கு­மி­டம் தீப்­பி­டித்து எரிந்­த­தில் 39 பேர் மாண்­ட­னர். அங்கு மத்­திய, தென் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த 68 ஆட­வர்­கள் தங்­கி­யி­ருந்­த­னர். தீயில் மேலும் 29 பேருக்கு பலத்த தீக்­கா­யம் ஏற்­பட்­டது. அவர்­கள் நான்கு வெவ்­வேறு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக மெக்­சி­கோ­வின் தேசிய புலம்­பெ­யர்ந்­தோர் கழ­கம் கூறி­யது. அமெ­ரிக்­கா­வும் மெக்­சி­கோ­வும் தங்­க­ளது எல்­லை­யில் ஊடு­ரு­வ­லைத் தடுக்க முயன்றுவரும் வேளை­யில் இத் துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.