பாரிஸ்: ஓய்வூதிய சீர்திருத்தத்தையும் போராட்டங்களையும் கையாண்ட விதம் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோனின் தனிப்பட்ட செல்வாக்கை அடிமட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று நேற்று தெரிவித்தது.
'ஒடோக்ஸா' ஆய்வுக் குழுமம் நடத்திய ஆய்வில், 70 விழுக்காட்டினர் திரு மக்ரோனுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆதரவாக 30 விழுக்காட்டினர் மட்டும் பேசினர். இதற்கு முன்னர் 36 விழுக்காடாக இருந்த கொஞ்சநஞ்ச ஆதரவும் 6 விழுக்காடு சரிந்தது. இதற்கு முன்னர் 2018 டிசம்பரில் அவரது செல்வாக்கு 27 விழுக்காடாக அதலபாதாளத்தில் இருந்தது. தற்போதைய நிலவரம் மீண்டும் அந்த நிலையை எட்டுவதை உணர்த்தி உள்ளது.

