கோலாலம்பூர்: பதவியிலிருந்த போது தாமும் தமது குடும்பமும் வளம்கொழிக்க வாழ்ந்ததாக பிரதமர் அன்வார் தெரிவித் திருப்பது தம்மீதான பழிச்சொல் என்றும் அதனை 7 நாளுக்குள் அவர் திரும்பப் பெறவேண்டும் என்றும் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார். அதன் தொடர்பில் மார்ச் 27ஆம் தேதியிட்ட கடி தத்தை தாம் அனுப்பியிருப்பதாக வும் தமது குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் திரு அன்வார்மீது வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் கூறினார். கடந்த 18ஆம் தேதி பிகேஆர் கட்சிக் கூட்டத்தில் பேசிய திரு அன்வார், 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவர் தமது பதவியைப் பயன்படுத்தி சுகவாழ்வு வாழ்ந்ததாகப் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
அன்வாருக்கு மகாதீர் 7 நாள் கெடு
1 mins read
-