விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
779396f9-deba-484d-b7dd-cffc544c23c1
-

அசலும் நகலுமாக மெஸ்ஸி

பராகுவே: கத்தார் உலகக் கிண்ண நாயகன் லயனல் மெஸ்ஸியின் முழுஉருவச் சிலை தென் அமெரிக்க காற்பந்து கூட்டமைப்பின் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அர்ஜெண்டினாவை உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வழிநடத்தி 36 ஆண்டு களுக்குப் பின்னர் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் சிலை அவரது வழிகாட்டியும் 1986 உலகக் கிண்ண நாயகனுமான டியாகோ மரடோனாவின் சிலைக்கு அருகே இடம்பெற உள்ளது. திங்கட்கிழமை பராகுவேயின் லூக் நகரில் நடைபெற்ற சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி, 35, தமது உருவச் சிலைக்கு அருகே நின்று புன்னகை பூத்தார். "இப்படி ஒரு சிலை அமையும் என்று நான் கனவுகூட கண்டதில்லை," என்று அவர் வியந்தார்.

காயமடைந்ததால் தலைவர் மாற்றம்

புதுடெல்லி: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. இவ்வேளையில், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயமடைந்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரால் பாதிப் போட்டிகளில்கூட விளையாடமுடியாது எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கோல்கத்தா அணியின் புதிய தலைவர் தொடர்பில் கடந்த சில நாள்களாகவே ஊகச் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில், அவ்வணியின் இடைக்காலத் தலைவராக நிதீஷ் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த பருவத்தில் கோல்கத்தா அணியில் ஆக அதிக ஓட்டம் எடுத்தோர் பட்டியலில் 361 ஓட்டங்களுடன் இரண்டாமிடம் பிடித்தார் ராணா.

டோனி கைகளால் பூத்த நீலம், மஞ்சள்

சென்னை: சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் சொந்த

அரங்­கான சென்னை சேப்­பாக்­கம் எம்.ஏ.சிதம்­ப­ரம் விளை­யாட்­ட­ரங்­கும் ஐபி­எல் போட்­டி­க­ளுக்­குத் தயா­ராகி வரு­கிறது. அவ்­வ­கை­யில், அணி­யின் தலை­வர் மகேந்­திர சிங் டோனி­யும் அரங்­கி­ன் இருக்­கை­க­ளுக்­கு தெளிப்­பா­னைக் கொண்டு வண்­ணம் பூசும் பணி­யில் ஈடு­பட்­டார் (படம்). அத­னைக் காட்­டும் காணொ­ளி­யைச் சென்னை அணி தனது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. நேற்று (மார்ச் 28) நண்­ப­கல்­வரை இக்­கா­ணொளி 600,000க்கும் மேற்­பட்­டோரை ஈர்த்­துள்­ளது. அவ்­வ­ரங்­கில் ஏப்­ரல் 3ஆம் தேதி நடக்­கும் போட்­டி­யில் சென்னை அணி, லக்னோ சூப்­பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்­தாட இருக்­கிறது. இது­வரை 13 முறை ஐபி­எல் போட்­டி­கள் நடந்­துள்ள நிலை­யில் சென்னை அணி ஒன்­பது முறை இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது; நான்கு முறை மகு­டம் சூடி­யுள்­ளது.