அதிகரிக்கும் பதற்றம்; சீனாவுடன் பைடன் உதவியாளர் பேச்சு

அதிகரிக்கும் பதற்றம்; சீனாவுடன் பைடன் உதவியாளர் பேச்சு

2 mins read
1c28b8cf-74d4-476d-8c09-39987b95417f
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே நாளுக்கு நாள் பதற்­றம் அதி­க­ரித்து வரும் வேளை­யில் அத­னைத் தணிக்­கும் வகை­யில் சீன உயர் அதி­காரி வாங் யியு­டன் பைடன் உத­வி­யா­ளர் ஜேக் சலவன் பேச்சு நடத்­தி­னார் என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்­மைய மாதங்­க­ளாக அதி­க­ரித்து வரும் பதற்­றத்தை தணிப்­பது குறித்து இரு­வ­ரும் பேசி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தைவான் அதி­பர் சாய் இங் வென், இரு நாடுகளுக்கு அமெ­ரிக்கா வழி­யா­கச் செல்­வ­தால் சீனா­வுக்­குக் கோபத்தை ஏற் ­படுத்­த­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலை­யில் இரு நாட்­க­ளுக்கு முன்பு முன்­கூட்டி ஏற்­பாடு செய்­யப்­ப­டாத அழைப்­பில் வாங் யியு­டன் சலவன் பேசி­யி­ருக்­கி­றார்.

ஆனால் சலவன்-வாங் யிக்கு இடையே நடை­பெற்ற உரை­யா­டலை இருதரப்­பும் இது­வரை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­க­வில்லை.

வெள்ளை மாளிகை பேச்­சா­ள­ரும் சீனத் தூதர்­களும் இது பற்றி கருத்து தெரி­விக்­க­வும் மறுத்­து­விட்­ட­னர்.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னுக்­கும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­குக்­கும் இடையே அதி­கா­ர­பூர்வ தொலை­பேசி அழைப்பை பைடன் நிர்­வா­கம் ஏற்­பாடு செய்து வரும் வேளை­யில் இந்­தப் பேச்சு இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நே­ரம் இரு அதி­பர்­க­ளுக்கு இடை­யி­லான பேச்சு இடம்­பெற்று இ­ருக்க வேண்­டும் என்று அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் பெரி­தும் எதிர்­பார்த்­த­னர்.

ஆனால் சீனா அத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு பிடி­கொ­டுக்­கா­மல் இருந்து வரு­கிறது.

தைவான் அதி­பர் சாய் தனது பய­ணத்தை முடித்­துக் கொண்டு ஏப்­ர­லில் நாடு திரும்­பும் வரை இந்­தப் பேச்சு இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு இல்லை என்று பைடன் நிர்­வா­கம் கரு­து­கிறது.

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் இரு­த­ரப்பு வர்த்­த­கம், தொழில்­நுட்­பம் முதல் தென்­ சீ­னக் கடல் விவ­கா­ரம் வரை தொடர்ந்து மோத­லில் ஈடு­பட்டு வரு­கின்­றன. அண்­மை­யில் இரு­த­ரப்பு உற­வில் மேலும் விரி­சல் ஏற்­பட்­டது.