அமெரிக்க நாயகருக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க நாயகருக்கு சீனா எச்சரிக்கை

2 mins read
10616a0a-f997-420f-a555-2058249ad8e8
-

பெய்­ஜிங்: தனக்­குப் பிடிக்­கா­த­வர்­களை மற்­ற­வர்­கள் சந்­திக்­கக் கூடாது என்ற எண்­ணத்­தில் செயல்­படும் சீனா, தனக்­குப் பிடிக்­காத தைவான் அதி­பரை அமெ­ரிக்க பிர­தி­நி­தி­கள் சபை­யின் நாய­கர் கெவின் மெக்கார்த்தி சந்­தித்­தால் அதற்­கு­ரிய பதி­ல­டித் தரப்­படும் என்று எச்­ச­ரித்­துள்­ளது.

தைவான் அதி­பர் சாய் இங் வென் இடை­வ­ழிப் பய­ண­மாக அமெ­ரிக்கா செல்ல திட்­ட­மிட்­டுள்­ளார். அப்­போது அவரை அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் சந்­திப்­பார்­கள் என்ற எதிர்­பார்ப்­புக்­கி­டையே சீனா­வின் எச்­ச­ரிக்கை வெளி­யாகி­யுள்­ளது.

அத்­த­கைய நட­வ­டிக்கை ஆத்­தி­ர­மூட்­டும் செயல் என்­றும் அது தெரிவித்தது.

ஜன­நா­யக முறை­யில் ஆட்சி நடை­பெ­றும் தைவானை தனக்­குச் சொந்­த­மான பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கோரி வரு­கிறது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் அவ­ரைச் சந்­தித் தால் அது தைவானை தனி நாடாக அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான ஆத­ர­வா­கக் கரு­தப்­படும் என்று சீனா தெரி­வித்­தது.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்­தில் அப்­போ­தைய அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோசி தைவா­னுக்­குச் சென்­ற­போது சீனா, தனது போர் வலி­மை­யைக் காட்டி அச்­சு­றுத்­தி­யது. தைவா­னைச் சுற்றி போர்ப் பயிற்சி களை நடத்தி மிரட்­டும் தோர­ணை­யில் அது நடந்­து­கொண்­டது.

இதற்­கி­டையே அதி­பர் சாய் இங் வென் வெளி­நாட்­டில் இருக்­கும்­போது சீனா­வின் நட­வ­டிக்­கை­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்று தைவா­னின் ஆயு­தப்­ப­டை­கள் அறி­வித்­துள்­ளன.

குவாட்­ட­மாலா, பெலீஸ் நாடு­க­ளுக்கு நியூ­யார்க் வழி­யா­கச் சென்று லாஸ் ஏஞ்­ச­லிஸ் வழி­யாக தாயகம் திரும்­பு­வது அதி­பர் சாயின் திட்­ட­மா­கும்.

கலி­ஃபோர்­னி­யா­வில் அவர் கெவின் மெக்கார்த்தியை சந்திக் கலாம் என்று கூறப்­ப­டு­கிறது. இதனை இரு­நா­டு­களும் இது­வரை உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

பெய்­ஜிங்­கில் பேசிய சீனா­வின் தைவான் விவ­கார அலு­வ­ல­கப் பேச்­சா­ள­ரான ஷு ஃபெங்லி­யான், "அமெ­ரிக்கா வழி­யா­கச் செல்­லும் திரு­மதி சாய் ஹோட்­ட­லில் தங்­கு­வதோ விமான நிலை­யத்­தில் காத்­தி­ருப்­பதோ திட்ட மல்ல. ஆனால் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அவர் சந்­திக்க உள்ளார்.

"நாய­கர் மெக்கார்த்தியை அவர் சந்­தித்­தால் அது மற்றோர் ஆத்தி­ர­மூட்­டும் செய­லா­கக் கரு­தப்­படும். இது, தைவான் நீரி­ணை­யில் அமை­தியைப் பாதிக்கும்," என்று கூறினார்.