பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் செல்வந்தரான ஜோ லோவுக்கு நிதி மோசடி வழக்கில் குவைத் நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அல்-காபாஸ் நீதிமன்றம் மற்றொரு ஷேக்குக்கும் இதர இரண்டு பேருக்கும் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்ததாக உள்ளூர் நாளேடு ஒன்று தெரிவித்தது. இதில் வழக்கறிஞருக்கு மலேசிய நிதி தொடர்பில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசிய நிதி என அந்த நாளேடு குறிப்பிடவில்லை. இருந்தாலும் 1எம்டிபி தொடர்பான நிதி என்று சரவாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

