விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
83882c34-7c1f-4155-8ee1-1696e7934a2b
-

நூறு கோல்கள் போட்டு

லயனல் மெஸ்ஸி சாதனை

அர்ஜெண்டினா அணி, கத்தாரில் உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அதன் தலைவர் லயனல் மெஸ்ஸி மற்றொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கியூரசாவுக்கு எதிரான நட்பு முறை ஆட்டத்தில் அவர் 100வது கோலைப் போட்டு சாதனைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றது. அர்ஜெண்டினா அணித் தலைவரும் தலைசிறந்த வீரருமான மெஸ்ஸி இதில் மூன்று கோல்களை அடுத்தடுத்து போட்டு ஹாட்ரிக் சாதனையும் புரிந்தார். மெஸ்ஸி முதல் கோலைப் போட்டபோது அனைத்துலக அரங்கில் 100வது கோல் சாதனையைத் தொட்டார். அனைத்துலகப் போட்டிகளில் 100 கோல்களை போட்ட 3வது வீரர் மெஸ்ஸி. போர்ச்சுக் கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்களைப் போட்டு முதல் இடத்தில் உள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்த அலிடேய் 109 கோல்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

சிஎஸ்கே அணி புதிய

வீரர்களுக்கு சீருடை

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இடம்பெற்ற புதிய வீரர்களுக்கு அவர் களுக்கான சீருடை வழங்கப்பட்டது. அந்த அணியின் சார்பில் ஸ்ரீனிவாசன், டோனி, ஸ்டீஃபன் ஃபிளமிங், காசி விஸ்வநாதன் ஆகியோர் அணியின் புதிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரஷீத் ஆகியோருக்கு புதிய சீருடையை வழங்கினர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.