பேங்காக் விமான நிலையத்தில் மூவர் கைது; பயணிகளின் பணப்பையைக் காணவில்லை

பேங்காக் விமான நிலையத்தில் மூவர் கைது; பயணிகளின் பணப்பையைக் காணவில்லை

1 mins read
a2842b26-18ea-4b10-bf6f-7915df7766b5
-

பேங்­காக்: பேங்­காக்­கின் சுவர்­ண­பூமி விமான நிலை­யத்­தில் பய­ணி­க­ளின் பையி­லி­ருந்து பணத்­தைத் திரு­டி­ய­தாக நம்­பப்­படும் மூன்று மங்­கோ­லி­யர்­களை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.

கடந்த வெள்­ளிக்கிழமை 37 முதல் 51 வயது வரை­யி­லான மூன்று சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக விமான நிலைய இயக்­கு­நர் கிட்­டி­போங் கிட்­டி­கா­ஜோர்ன் தெரி­வித்­தார்.

இரண்டு ஜப்­பா­னி­யர்­கள், ஒரு தாய்­லாந்துப் பெண், ஒரு கன­டிய ஆட­வர் தங்­க­ளு­டைய பணப் பையை­யும் பணத்­தை­யும் காண­வில்லை என்று புதன்­கி­ழமை மாலை­யி­லி­ருந்து வியா­ழன் காலை வரை புகார்­கள் வந்­த­தா­க­வும் கண்­கா­ணிப்­பு கேம­ரா­வில் மூவ­ரும் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். காணா­மல் போன பணத்­தின் மதிப்பு 260,000 பாட் (S$10,000) என நம்­பப்­ப­டு­கிறது.

மூவ­ரும் ஒரு பெண்­ணின் உத­வி­யு­டன் பணத்­தைத் திரு­டி­னர். காணா­மல் போன பெண்ணை காவல்­து­றை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.