அமெரிக்காவில் தைவான் அதிபர், சீனா எச்சரிக்கை

அமெரிக்காவில் தைவான் அதிபர், சீனா எச்சரிக்கை

1 mins read
864b6627-6026-42c1-a532-8b7bb7ec3f3e
-

நியூ­யார்க்: தைவான் அதி­பர் சாய் இங் வென் அமெ­ரிக்­கா­வுக்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். வெளி­யி­லி­ருந்து வரும் மிரட்­டல்­கள், தைவான் உலக நாடு­க­ளு­டன் உற­வா­டு­வதைத் தடுக்­காது என்­று திரு­வாட்டி சாய் கூறி­யி­ருந்­தார்.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் கெவின் மெக்­கார்த்­தியைத் திரு­வாட்டி சாய் சந்­தித்­தால் பதி­லடி கொடுக்­கப்­படும் என்று சீனா மிரட்­டல் விடுத்­தி­ருந்­தது. அதைத் தொடர்ந்து திரு­வாட்டி சாய் இவ்­வாறு சொன்­னார்.

குவாட்­ட­மாலா, பெலீஸ் ஆகிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும்­போது திரு­வாட்டி சாய் நடுவே அமெ­ரிக்­கா­வுக்­கும் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். நேற்று முன்­தி­னம் அந்­நாட்­டைச் சென்­ற­டைந்­தார்.

திரு­வாட்டி சாயைச் சந்­திக்­க­கூ­டாது என்று சீனா, அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளைத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.

அவர் நாளை­வரை நியூ­யார்க் நக­ரில் இருப்­பார். குவாட்­ட­மாலா, பெலீஸ் நாடு­க­ளி­லி­ருந்து திரும்­பும்­போது லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ருக்­கும் செல்­வார்; கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் திரு­வாட்டி சாய், திரு மெக்­கார்த்­தி­யைச் சந்­திப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. எனி­னும், ஆகக் கடைசி நில­வ­ரப்­படி இது குறித்து அதி­கா­ர­பூர்­வத் தக­வல் ஏதும் இல்லை.

இதற்­கி­டையே, தைவா­னும் சீனா­வும் கூடு­மா­ன­வரை தங்களுக்கிடையே போர் மூள்­வதைத் தவிர்க்­க­வேண்­டும் என்று முன்னாள் தைவானிய அதி­பர் மா யிங் ஜியோவ் சீனாவின் மூத்த அதி­காரி ஒரு­வ­ரி­டம் கூறி­யுள்­ளார். கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று திரு மா சீனா சென்­றார். தைவான் அதி­ப­ராக இருந்த ஒரு­வர் பத­விக் காலத்­திலோ அதற்­குப் பிறகோ சீனா­வுக்கு அதி­காரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை.