லாஸ் ஏஞ்சலிஸ்: அட்லான்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளைப் பெறும் இடத்தில் தனது பெட்டியைத் தொலைத்தார் அமெரிக்கரான திரு ஜேம்ஸ் ரீட். சில நாள்களுக்குப் பிறகு தானே அதைக் கண்டுபிடித்தார்.
தனது பெட்டியில் ஏப்பல் நிறுவனத்தின் 'ஏர்டேக்' கருவியை வைத்தது அவரின் நினைவுக்கு வந்தது.
பொருள்கள் எங்கெல்லாம் கொண்டுசெல்லப்டுகிறது என்பதை கைப்பேசி வாயிலாகத் தெரிவிக்கும் கருவியே 'ஏர்டேக்'.
அதுவே பெட்டியைக் கண்டுபிடிக்க திரு ரீடுக்கு உதவியது. பெட்டியைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் கிரெய்க் நெல்சன் என்பவருடன் திரு ரீட் தானே மோதி பெட்டியைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

