பிலிப்பீன்ஸ் கப்பலில் தீ, பலர் மரணம்

பிலிப்பீன்ஸ் கப்பலில் தீ, பலர் மரணம்

1 mins read
4fb9deb3-6b9b-47f0-a69f-a8994c3a35e5
-

மணிலா: பிலிப்­பீன்­சில் பய­ணி­கள் கப்­பல் ஒன்­றில் தீ மூண்­ட­தால் ஆகக் கடைசி நிலவரப்படி ஓர் ஆறு மாதக் குழுந்தை உட்­பட குறைந்­தது 29 பேர் மாண்­டு­விட்­ட­னர். இச்­சம்­ப­வம் பிலிப்­பீன்­சின் தெற்­குப் பகு­தி­யில் நிகழ்ந்­த­தென கட­லோ­ரக் காவல்­படை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். உள்­நாட்­டுக்­குள் பய­ணம் மேற்­கொள்­ளும் 'எம்வி லேடி மேரி ஜாய் 3' என்ற பெய­ரைக் கொண்ட இக்­கப்­ப­லில் தீ மூண்­டது.

உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் இரவு சுமார் 11 மணிக்கு பாசி­லான் தீவுக்கு அருகே சம்­ப­வம் நேர்ந்­தது. தீ மூண்­ட­போது கப்­ப­லில் இருந்த பய­ணி­களில் பலர் அதன் கீழ்த்­த­ளத்­தில் இருக்­கும் குளிர்­சா­தன வச­தி­கொண்ட பகு­தி­யில் உறங்­கிக் கொண்­டி­ருந்­த­னர்.

கப்­ப­லில் மொத்­தம் எத்­தனை பய­ணி­கள் இருந்­த­னர் என்­ப­தன் தொடர்­பில் மாறு­பட்ட தக­வல்­கள் வெளி­யா­யின. கப்­ப­லிலிருந்து 36 கப்­பல் ஊழி­யர்­கள் உட்பட மொத்தம் 225 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக கட­லோ­ரக் காவல்­படை தெரி­வித்­தது.

தீ மூண்­ட­போது கப்­ப­லில் இருந்த பெரும்­பா­லோர் தூங்­கிக் கொண்­டி­ருந்­த­தால் நிலைமை களே­ப­ர­மாக இருந்­த­தென தென் மிண்­டா­னாவ் வட்­டா­ரத்­துக்­கான கட­லோ­ரக் காவல்­ப­டைத் தலை­வர் கொமொ­டோர் ரெஜார்ட் பார்ஃபே ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.

மூன்று சிறு­வர்­கள் உட்­பட கப்­ப­லி­லி­ருந்து குதித்த 11 பேர் நீரில் மூழ்கி மாண்­ட­தா­க­வும் 18 பேர் கப்­ப­லில் கறு­கிப்­போய் மாண்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டது.