தாய்லாந்தில் காட்டுத் தீ; மோசமடையும் காற்றுத்தரம்

தாய்லாந்தில் காட்டுத் தீ; மோசமடையும் காற்றுத்தரம்

1 mins read
6a2e6583-1c6d-43ce-b8bb-88172a60b10f
-

வட தாய்லாந்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் அந்நாட்டின் காற்றுத்தரம் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோசமான காற்றுத்தரத்தால் இவ்வாண்டு இதுவரை சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சியாங் மாய், சியாங் ராய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாய்லாந்து பிரதமர் பிராயுத் சனோச்சா உத்தரவிட்டுள்ளார்.

படம்: ஏஎஃப்பி