டிரம்ப்மீது குற்றவியல் வழக்கு

டிரம்ப்மீது குற்றவியல் வழக்கு

2 mins read
fb5b2245-d154-442e-8b12-8d9752749756
-

நியூ­யார்க்: தான் இழைத்த தவறு வெளி­வ­ரா­மல் இருக்க முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப், ஆபா­சப் பட நடிகை ஸ்டார்மி டேனி­யல்­சுக்­குப் பணம் கொடுத்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அதன் தொடர்­பில் அவர்­மீது குற்­ற­சச்ா­ட்­டு­க­ளைச் சுமத்த அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரின் மேன்­ஹேட்­டன் பகு­தி­யில் உள்ள மாவட்ட நீதி­மன்­றம் ஒன்று அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் ஒரு­வர்­மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்­முறை. அடுத்த அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டும் முயற்­சி­யில் 76 வயது திரு டிரம்ப் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கும் வேளை­யில் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரத்­தால் அவர் மீண்­டும் அதி­பர் தேர்­த­லில் போட்டி­யி­டும் வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

திரு டிரம்ப்­பின்­மீது சுமத்­தப்­படவுள்ள குற்­றச்­சாட்­டு­கள் குறித்து விவ­ரம் ஏதும் வெளி­யிடப்­ப­ட­வில்லை. வர்த்­தக ரீதி­யான ஏமாற்று நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தன் தொடர்­பில் திரு டிரம்ப் 30க்கும் அதி­க­மான குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­வதாக சிஎன்­என் தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

தாம் முழுக்க முழுக்க நிர­ப­ராதி என்று அறிக்கை ஒன்­றில் திரு டிரம்ப் குறிப்­பிட்­டார். இச்­செ­யல் அர­சி­யல் ரீதி­யாக ஒரு­வரை சீர­ழிப்­பதா­கும் என்­றும் அவர் சாடி­னார்.

குற்­றச்­சாட்­டு­களை எதிர்த்து தீவி­ர­மாக வாதி­டப்­போ­வ­தாக அவ­ரின் வழக்­க­றி­ஞர்­க­ளான சுசன் நெஷெ­லெ­சும் ஜோசப் டாக்­கோப்­பி­னா­வும் கூறி­னர்.

2006ஆம் ஆண்­டில் திரு திரு டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்­துக்­கொண்­டதை வெளியே சொல்­லா­மல் இருக்க அவர் தனக்­குப் பணம் கொடுத்­ததாக ஸ்டார்மி டேனி­யல்ஸ் கூறி­யி­ருந்­தார். யாரும் சட்­டத்­திற்கு மேலா­ன­வர் அல்­லர் என்­பதை இந்த வழக்கு காட்­டு­வ­தாக அவ­ரின் வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாயகர் கெவின் மெக்­கார்த்தி உட்­பட குடி­ய­ர­சுக் கட்­சி­யின் மூத்த அர­சி­யல் தலை­வர்­கள் பலர் திரு டிரம்ப்­பிற்கு ஆத­ர­வாக நிற்ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சி­யில் அவ­ருக்கு இன்­ன­மும் நல்ல ஆத­ரவு இருப்­பதை இது எடுத்­துக்­காட்­டு­வ­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.