தைவான் எல்லையில் போர்க் காலப் பயிற்சி மேற்கொள்ளும் சீன ஆகாயப் படை

தைவான் எல்லையில் போர்க் காலப் பயிற்சி மேற்கொள்ளும் சீன ஆகாயப் படை

1 mins read
9e1d6666-47b2-4cf0-b5cb-b036fa48b4ea
-

நியூ­யார்க்: தைவான் நீரிணையில் சீனா­வின் ஆகா­யப் படை விமா­னங்­கள் போர் காலப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன. சீன ஆகா­யப் படை­யின் ஒன்­பது விமா­னங்­கள் தைவா­னின் கடற்­ப­கு­திக்­குள் நுழைந்து நேற்று பயிற்சி மேற்­கொண்­டன.

தைவான் அதி­பர் சாய் இங் வென் அமெ­ரிக்­கா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அங்கு அவர் அமெ­ரிக்­கா­வின் நாடா­ளு­மன்ற நாய­கர் கெவின் மெக்­கார்த்­தி­யைச் சந்­தித்­தால் பதி­லடி கொடுக்­கப்­படும் என்று பெய்­ஜிங் மிரட்­டல் விடுத்­தி­ருந்­த­தைத் தொடர்ந்து ஆகா­யப் படைப் பயிற்சி இடம்­பெற்­றுள்ளது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி நியூ­யார்க் நக­ரில் இருக்­கும் திரு­வாட்டி சாய், குவாட்­ட­மாலா, பெலீஸ் ஆகிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட பிறகு தைவா­னுக்­குத் திரும்­பும்­ வழியில் லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ரில் திரு மெக்­கார்த்­தி­யைச் சந்­திப்­பார் என்று எதிர்­பார்ப்­ப­டு­கிறது.

இந்நிலையில், சீனா பதற்­றத்தை அதி­க­ரிக்­கும் வேளை­யிலும் தைவான் அமை­தி­யாக இருந்து வந்­துள்­ள­தென திரு­வாட்டி சாய் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார். நியூ­யார்க்­கில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது அவர் இதைக் குறிப்­பிட்டார்.