வாஷிங்டன்: மியன்மாரின் பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து மோசமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று விழுக்காடு மட்டுமே அதிகரிக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்பு மியன்மார் ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்நாடு இன்னமும் வன்முறை, மின்தடைகள் உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் மியன்மாரின் வர்த்தக நிலவரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் மியன்மாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 விழுக்காடு சுருங்கியது என்றும் சென்ற ஆண்டு மூன்று விழுக்காடு வளர்ச்சி கண்டது என்றும் உலக வங்கி தெரிவித்தது.

