ஸ்பெயினின் அஸ்டுரியாசை சூறையாடிய காட்டுத் தீ; தீவைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

ஸ்பெயினின் அஸ்டுரியாசை சூறையாடிய காட்டுத் தீ; தீவைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

1 mins read
7efcb90c-a12c-454f-9753-0aff0abc02bb
-

மட்ரிட்: ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள இயற்கை எழில்மிக்க அஸ்டுரியாஸ் வனப்பகுதிக்கு 90க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீ சம்பவங்கள் வானிலை காரணமாக நிகழவில்லை என்றும் தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்டது என்றும் ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ வைத்தவர்கள் பயங்கரவாதிகளுக்குச் சமம் என்று அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.

அஸ்டுரியா வனப்பகுதியையும் அருகில் வசிப்பவர்களையும் அங்குள்ள உயிரினங்களையும் அழிக்க அவர்கள் இவ்வாறு செய்திருப்பதாக ஸ்பானிய அதிகாரிகள் கூறினர்.

கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 600க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காட்­டுத் தீ கார­ண­மாக அரு­கில் உள்ள பல நக­ரங்­க­ளி­லி­ருந்து மக்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

அரு­கில் இருந்த சாலை­கள், விரை­வுச்­சா­லை­கள் ஆகி­யவை மூடப்­பட்­ட­தாக ஸ்பா­னிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இவ்­வாண்டு மேலும் பல காட்­டுத் தீ சம்­ப­வங்­கள் நிக­ழும் என்று ஸ்பா­னிய அர­சாங்­கம் கவலை தெரி­வித்­துள்­ளது.

இதற்கு தென் ஐரோப்பா முழு­வ­தி­லும் ஏற்­பட்­டுள்ள வழக்­கத்­துக்கு மாறான வறண்ட குளிர்­கா­லமே கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.