ஆப்கானில் கைதுசெய்யப்பட்ட மூவரில் பிரிட்டனின் யூடியூப் பிரபலமும் ஒருவர்

ஆப்கானில் கைதுசெய்யப்பட்ட மூவரில் பிரிட்டனின் யூடியூப் பிரபலமும் ஒருவர்

1 mins read
34cf664a-97bb-4959-a214-d247adba59a1
-

லண்­டன்: ஆப்­கா­னிஸ்­தா­னின் காபூ­லில் தலி­பான் காவல்­து­றை­யி­ன­ரால், பிரிட்­ட­னைச் சேர்ந்த மூன்று பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிரிட்­ட­னில் செயல்­படும் லாப­நோக்­கற்ற அமைப்­பான 'பிரெ­சி­டி­யம் நெட்­வொர்க்' தெரி­வித்­தது.

அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களில் 'டேஞ்­சர் டூரிஸ்ட்' யூடியூப் பிர­ப­லம் 23 வயது மைல்ஸ் ரொட்­லெட்ஜ் என்­ப­வ­ரும் ஒரு­வர் என்று அந்த அமைப்பு கூறி­யுள்­ளது.

கைதான மற்ற இரண்டு பேரும் ஒரு தொண்­டூ­ழிய அமைப்­பைச் சேர்ந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் என்று அந்த அமைப்பு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு உதவி வரு­வ­தாக பிரிட்­ட­னின் வெளி­யு­றவு அமைச்சு ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்துள்ளது. பிரெ­சி­டி­யம் நெட்­வொர்க் அமைப்­பைச் சேர்ந்த திரு ஸ்கார்ட்ஸ் ரிச்­சர்ட்ஸ், ஸ்கை நியூஸ் தொலைக்­காட்­சிக்­குப் பேட்­டி­ய­ளிக்­கை­யில், கைது­செய்­யப்­பட்ட மூவ­ரும் நல்ல ஆரோக்­கி­யத்­து­டன் இருப்­ப­தா­க­வும் அவர்­களை காவல்­து­றை­யி­னர் நன்­றாக கவ­னித்­துக்­கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.