'வோக்' இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த 106 வயது கலைஞர்

'வோக்' இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த 106 வயது கலைஞர்

2 mins read
fd54381b-6ce7-4a73-a9ce-d9547efd3977
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் நாட்டு ஆதிக்­கு­டி­யைச் சேர்ந்த 106 வயது பச்சை குத்தும் கலைஞர், அங்­குள்ள ஒரு மாத இத­ழின் அட்­டைப் படத்தை அலங்­க­ரித்­துள்­ளார். 'வோக்' என்ற அந்த உல­கப் புகழ்­பெற்ற மாத இதழ், உல­கில் புதி­தாக உரு­வாக்­கப்­படும் புது­மை­யான ஆடை அலங்­கா­ரம், அழ­கி­யல் மற்­றும் புது­மை­யான வாழ்க்­கைப் பாணி போன்­றவை குறித்த தகவல்களை வெளி­யிட்டு வருகிறது.

அவ்­வ­கை­யில் 2023 ஏப்­ரல் மாதத்­திற்­கான அந்த இதழ் மணி­லா­வின் ஆதிக்­கு­டி­யைச் சேர்ந்த ஏப்போ வாங்-ஆட் என்ற 106 வயது மூதாட்டி (படம்) ஒரு­வ­ரின் படத்­தைக் கொண்டு தனது அட்­டைப் படத்தை அலங்­க­ரித்­துள்­ளது. இவர் மரியா ஓகே என்­றும் அழைக்­கப்­ப­டு­கி­றார்.

ஆதிக்­கு­டி­க­ளுக்கே உரித்­தான வகை­யில் தனது உட­லில் பச்­சைக்­குத்தி ஓவி­யத்­தால் அழகு­ப­டுத்­திக்­கொண்டு அந்த மாத இத­ழின் புகைப்­ப­டத்­திற்­குக் காட்சி தரு­கி­றார்.

பிலிப்­பீன்­ஸின் கலிங்கா மாநிலத்­தின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள புஸ்­க­லம் என்­னும் சிற்­றூ­ரில் வசித்து வரு­கி­றார் மூதாட்டி வாங்-ஆட். பச்­சை குத்­து­வ­தில் வல்­ல­வ­ரான மரி­யா­வைத் தேடி வந்து பெண்­கள் பச்­சைக் குத்­திக் கொள்­கி­றார்­க­ளாம்.

கலிங்கா மாநிலத்தின் பட்-பட் பழங்­குடி இனத்­தைச் சேர்ந்­த­வர் வாங்-ஆட். அந்த இனத்தவர்கள் பச்சை குத்துவதை வீரத்தையும் அழகையும் பறைசாற்றும் சின்னமாகக் கருதுகின்றனர்.

நாள­டை­வில் பச்­சைக் குத்­து­வது காட்­டு­மி­ராண்­டித் தனம், மூடத்­த­னம் என்று பல­ரால் கேலி செய்­யப்­பட்­டும் ஆதி­கு­டி­க­ளி­டம் பச்­சைக் குத்­தும் பழக்­கம் தொடர்­கிறது. பச்­சைக் குத்­திக் கொள்­வ­தற்கு தன்னை நாடி வரும் ஆதிக்­குடி பெண்­க­ளுக்கு தாம் பச்­சைக் குத்­தி உற்சாகப்படுத்தி வருவதாகக் கூறி­னார் வாங்-ஆட்.

திரு­வாட்டி வாங்-ஆட் தங்­க­ளின் வோக் பிலிப்­பீன்ஸ் மாத இத­ழின் அட்டைப் படத்தில் பிர­சு­ரிப்­ப­தன் வாயி­லாக, பிலிப்­பீன்­சின் பண்­பாட்­டை­யும் கலா­சா­ரத்­தை­யும் வாங்-ஆட் பிர­தி­ப­லிப்­பார் என்று உணர்ந்­த­தாக 'வோக் பிலிப்­பீன்ஸ்' மாத இத­ழின் ஆசி­ரி­யல் பீ வால்­டெ­மஸ், சிஎன்­என் செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.