மிரட்டும் வடகொரியா; 3 நாடுகள் பயிற்சி

மிரட்டும் வடகொரியா; 3 நாடுகள் பயிற்சி

2 mins read
1e3ca760-8c40-42dd-9d43-95076d7e15a2
-
Google News Preferred Icon

சோல்: அமெ­ரிக்கா, ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகிய மூன்று நாடு­களும் கொரிய தீப­கற்­பத்­தில் கூட்­டுக் கடற்­படை பயிற்­சியை நேற்­றுத் தொடங்­கி­ய­தால் வட கொரியா கோப­ம­டை­ய­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதே போன்ற கடற்­ப­யிற்சி 2022ல் நடை­பெற்­ற­போது ஜப்­பானை நோக்கி முதல் ஏவு­க­ணை­யைப் பாய்ச்சி அது மிரட்­டி­யது.

இரண்டு நாள் நீர்­மூழ்கி எதிர்ப்பு, மீட்­புப் பயிற்சி தென்­கொ­ரி­யா­வின் ஜேஜு தீவுக்கு அருகே உள்ள அனைத்­து­ல­கக் கடற்­ப­ரப்­பில் நேற்று தொடங்­கப்­பட்­டது.

யுஎஸ்­எஸ் நிமிட்ஸ் விமா­னம் தாங்­கிக் கப்­ப­லும் பயிற்­சி­யில் பங்­கேற்­றது என்று தென்­கொ­ரிய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

"வட­கொ­ரி­யா­வின் நீருக்­க­டி­யி­லான மிரட்­டல் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. இந்த நிலை­யில் இந்த நீர்­மூழ்­கிக் கப்­பல் எதிர்ப்­புப் பயிற்சி தென் கொரியா, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகி­யவை ஆற்­ற­லு­டன் தயா­ராக இருப்­பதை உறுதி செய்­யும்," என்று அமைச்சு மேலும் தெரி­வித்­தது.

ஆனால் இதற்­குப் பதி­ல­டி­யாக அமெ­ரிக்கா அதன் நட்பு நாடுளை அணு­வா­யு­தங்­க­ளு­டன் தாக்­கும் புதிய வடி­வ­மைக்­கப்­பட்ட போர் ஆயு­தங்­க­ளு­டன் பயிற்­சியை மேற்­கொள்­வோம் என்று வட­கொ­ரி­யா­வின் கிம் ஜோங் உன்­னின் ஆட்­சி­யா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

கடந்த மார்ச் மாதம் வட­கொ­ரியா மேற்­கொண்ட கட­லடி ஊர்தி சோத­னை­யும் அவற்­றில் ஒன்று.

இது, கதி­ரி­யக்க சுனா­மியை ஏற்­ப­டுத்­த­லாம் என்று தென்­கொ­ரியா சந்­தே­கிக்­கிறது.

"அமெ­ரிக்­கா­வும் அதற்கு ஏற்ப தலை­யாட்­டும் நட்பு நாடு­களும் போர்ப் பயிற்சி மூலம் ஆபத்தை நெருங்கி வரு­கின்­றன.

"போர் வெறி­யர்­க­ளின் பொறுப்­பற்ற செயல்­க­ளைத் தடுத்து நிறுத்த எந்த நேரத்­தி­லும் அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தத் தயா­ராக இருக்­கி­றோம்," என்று வட­கொ­ரியா எச்­ச­ரித்­துள்­ளது.